பின்லேடனை கொன்றவர் கைது!

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படையின் சீல் படை பிரிவினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரை றொபேர்ட் ஓ நெய்ல் என்ற வீரர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இந்த றொபேட் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடிதடி வழக்கு ஒன்றில் கடந்த புதன் அன்று அவர் கைதாகியுள்ளார். அவர் மீது பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல், உடல் காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதை தொடர்ந்து 3500 அமெரிக்க டொலர் (ரூ.3 லட்சம்) ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

பின்லேடனை கொன்றது குறித்து 2017-இல் றொபேட் ஓ நெய்ல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த தகவலை அமெரிக்க அரசு மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

றொபேட் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016 ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்