பிக் பாஸ் 4க்கு தொகுப்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா

தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் மூன்று சீசன் வெற்றிகரமாக சென்றுவிட்டது.

இதனை தமிழில் போலவே தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி மிக சிறந்த முறையில் நடைபெற்று வந்தது.

இதில் தெலுங்கில் இது வரை நடந்து வந்த முதல் சீசனில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.

இதன்பின் இளம் நடிகர் நானி இரண்டாம் சீசனை முன் நின்று தொகுத்து வழங்கினார். மூன்றாம் சீசனை தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவான நாகா அர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் 4ஆம் சீசனை, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்க போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால், இதுவரை இந்த விஷயத்தை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவர வில்லை.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முகநூலில் நாம்