பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் மலர்ந்தது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் கடந்த 3 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு விட்டது இந்த நிலையில் நான்காவது வருடத்தில் விஜய் தொலைக்காட்சி அடியெடுத்து வைத்துள்ளது, இந்த நான்காவது சீசன் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சர்ச்சைகள், காதல் காட்சி, சண்டைகள் என ஆரம்பித்துவிட்டது, இந்த நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வருபவர் பாலாஜி முருகதாஸ், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு காட்சியில் பாலாஜி முருகதாஸ் கேப்ரில்லாவைத் தங்கச்சி எனக்கூறி ஒரே போடாக போட்டார் இதைக்கேட்ட கேப்ரில்லா என்னை தங்கச்சின்னு கூப்பிடாத என பாலாஜியிடம் கெஞ்சியுள்ளார்.

அதன் பிறகு கமல் போட்டியாளர்களுடன் உரையாடினார் அப்பொழுது சோபாவில் அமர்ந்திருந்த கேப்ரில்லா மற்றும் பாலாஜியை பார்த்தால் உங்களுக்கே புரியும் ஏனென்றால் இவர்கள் இருவரும் ஒரே நிற உடையில் மிக அருகில் உட்கார்ந்து கொண்டு காதல் ஜோடி போல் உரசி கொண்டே இருக்கிறார்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஏனென்றால் கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் கேப்ரில்லாவைத் தங்கச்சி என்ன பாலாஜி முருகதாஸ் கூப்பிட்டார் ஆனால் இப்பொழுது காதல் ஜோடி போல் நடந்துகொள்வது பிக்பாஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் இந்த பிக் பாஸ் சீசனில் இவர்கள் தான் காதல் ஜோடிகளாக வலம் வருவார்கள் எனத் தெரிகிறது, ரசிகர்கள் எதிர்பார்ப்பு யார் காதல் ஜோடி என்பது தான் இன்னும் புரியாத புதிராக இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்