பிக் பாஸ் காமெடி நடிகர் டேனியலுக்கு குழந்தை பிறந்ததுவிட்டது.. குவியும் வாழ்த்துகள்..

விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காமெடி நடிகர் டேனியல்.

இதன்பின் கவலை வேண்டாம், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், திரி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதன்பின் பிக் பாஸ் 2ஆம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னை இன்னும் பிரபலப்படுத்தி கொண்டார்.
பிக் பாஸ் முடிந்து கையோடு தான் காதலித்து வந்து தெனிஷா எனும் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இந்த அழகிய காதல் ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தான் தந்தையான மகிழ்ச்சி தருணத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் டேனி.
இதற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முகநூலில் நாம்