பிக் பாஸ்ஸில் களம் இறங்கும் திரிஷா – நயன்தாரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடித்த இரண்டு ப்ரோமோ வீடியோ காட்சிகள் விஜய் டிவியில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சீசனில் ஷாலு ஷம்மு, ரியோ ராஜ், சஞ்சனா சிங், ஷிவானி நாராயணன் என சில போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பேஷன் நடனக் கலைஞர் மற்றும் பிரபல ஒப்பனையாளர் கருன் ராமன் பிக் பாஸ் 4-ல் தற்போது ஒரு போட்டியாளராக இணைந்து இருப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த அவர், நான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இல்லை. மற்றும் வரவிருக்கும் எனது அடுத்த திட்டம் அதை விட பெரியது என்று கூறியுள்ளார்.

கருன் ராமன் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். திரிஷா, நயன்தாரா போன்ற பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்