பிக்பொஸ் நிகழ்ச்சியில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சமந்தா!

தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார்.

இது குறித்த அனுபவங்களை அவர் தனது இரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடித்ததோடு சரி தெலுங்கும் சரளமாக பேசவராது.

அங்குள்ள போட்டியாளர்களை எப்படி கையாள்வது என்றெல்லாம் பயமாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனா உன்னால் முடியும் போ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.  அங்கு எனது மைத்துனர் அகில் வந்திருப்பதை பார்த்ததும் சகஜமானேன்.

நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு பலரும் என்னை பாராட்டினர். இப்போது என்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்