பிக்பாஸ் புகழ் காமெடி நடிகையின் மாஸான செயல்! பலரையும் பிரம்மிக்க வைத்த நிகழ்வு

திரைப்படங்களுக்கு நகைச்சுவைக்கு என நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பெண்கள் மிக மிக குறைவு. அதில் ஒருவர் நடிகை ஆர்த்தி.

காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும், ஹீரோயின்களுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். விக்ரமுடன் அருள், தனுஷுடன் குட்டி, படிக்காதவன், விஷாலுடன் திருவிளையாடல் என படங்களில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட இவர் சில நாட்களிலேயே வெளியேறினார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவர் படங்களில் ஏதும் பெரிதளவில் நடிக்கவில்லை.

இந்நிலையில் அவர் கல்லூரியில் கடந்த ஃபிப்ரவரி 29 ம் தேதி முனைவர் பட்டம் பெற்றுள்ளாராம். இந்த புகைப்படத்தை ஆர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவருடன் அவரின் கணவரான காமெடி நடிகர் கணேஷும் இருக்கிறார்.

வாழ்த்துக்கள் ஆர்த்தி….


முகநூலில் நாம்