பிக்பாஸ் தமிழ் – பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு!

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனும் அவரே தொகுத்து வழங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் புதுமையான முயற்சியாக பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர்.


இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தகுந்த காரணங்களுடன் கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் ( vijay.startv.com) குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக தங்களது காணொளி காட்சியை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்