பிக்பாஸ் சீசன் 4 எப்போது தெரியுமா? நிகழ்ச்சி தொகுப்பாளர் இவர் தானா?

பிக்பாஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்தை தூண்டிவிட்டது என்றே சொல்லலாம். ஹிந்தியில் சல்மான் கான் அண்மையில் தான் சீசன் 13 முடிவு பெற்றது.

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மொழிகளில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி இளம் தலைமுறையினரிடம் ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

தமிழில் இதுவரை கமல்ஹாசன் தான் 3 வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தெலுங்கில் ஜீனியர் எண்டிஆர், நானி, நாகார்ஜூனா என அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்கி வந்தனர்.

இந்நிலையில் 4 வது சீசன் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும் இதை தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் பிக்பாஸ் தமிழ் வெர்சன் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் நாம்