பிக்பாஸ் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு கவின் போட்ட எமோஷ்னல் பதிவு- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு சில பிரச்சனைகளுக்கு ஆளானவர் கவின்.

நிகழ்ச்சியில் இருந்து நடுவிலேயே பணத்துடன் கிளம்பினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கோபத்தை பெற்ற அவர் இப்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை ஷேர் செய்து தனது மனசில் இருப்பதை பகிர்ந்து வருகிறார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் எனது நண்பர்களால் பிக்பாஸ் போவதற்கு முன் நாள் எடுக்கப்பட்டது, அவர்களின் வாழ்த்து இது. இப்போது திரும்பி பார்த்தால் அந்த இரவில் சில விஷயங்கள் எப்படி மாறிவிட்டன என்று ஆச்சரியமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

முகநூலில் நாம்