பிக்பாஸ் கவினை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! சோகத்துடன் உருக்கமான பதிவு – ரசிகர்கள் கவலை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் காதல் மன்னன் போல வந்தவர் கவின். நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல், சினிமா நடிகர் என ஏற்கனவே நம் மனங்களை கவர்ந்தவர்.

சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரின் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

கவின் ஆர்மி என அவருக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் சமூக வலைதளத்தில் இருக்கிறது. குறிப்பாக டிவிட்டரில் அவர்கள் கவினுக்காக பல ட்ரெண்டிங்களை உருவாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் கவினின் ரசிகர் கமல் என்பவர் காலமாகிவிட்டதாக ட்விட்கள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து கவின் வாழ்க்கையில் நமக்கான நேரம் எப்போதும் வரும் என்பதை நாம் கணிக்க முடியாது. எனவே எப்போதும் உங்கள் அருகிலிருப்பவர்களையும், அன்புக்குரியவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். கமலின் ஆத்மா சாந்தியடைட்டும் என குறிப்பிட்டுள்ளார்………

முகநூலில் நாம்