பிகில் புகழ் பிரபல நடிகரின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! குடும்பத்தினர் சோகம் –

நடிகர் ஆனந்த்ராஜை தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன? பல ஹீரோக்களின் படங்களில் வில்லனாக 100 க்கும் அதிகமான நடித்து பிரபலமானவர். அண்மைகாலமாக காமெடி வில்லனாக நடித்து வருகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர். அவ்வப்போது சர்ச்சையாக பேசி விடுவார்.

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நண்பராக நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் சகோதரர் கனகசபை உடல் நலக்குறைவால் பாண்டிச்சேரியில் நேற்று காலை 11 மணியளவில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.

அன்னாரின் மறைவிற்கு சினி உலகம் தன் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறது.



முகநூலில் நாம்