பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்!

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

முகநூலில் நாம்