பாலா படத்திற்காக உடல் எடையை கூட்டிய ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலாவின் அடுத்த படத்திற்காக உடல் எடையை கூட்டியிருக்கிறார்.

பல வெற்றி படங்களை இயக்கியவர் பாலா. இவர் தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு, துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.


இப்படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா, அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலா படம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் ‘பாலா படத்துக்காக 73 கிலோவில் இருந்து, 95 எடை கூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதன்பின் அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்