வெள்ளத்தால் தகர்க்கப்பட்ட பாலம்: வௌியேற முடியாமல் தவிக்கும் மக்கள்!

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த தோட்ட பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 50ற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் இந்த தோட்டத்திலிருந்து கொட்டகலை நகரில் உள்ள பாடசாலைகள், ஸ்டோனிகிளிப் த.வி, கொட்டகலை த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்குச் சென்று வருகின்ற சில மாணவர்கள் உள்ளதுடன், வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்ற பலரும் உள்ளனர்.

இவர்களின் பிரதான பாதையாக இருந்த சிறிய ரக பாலம், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஊடான போக்குவரத்தே இவர்களுக்கு வசதியாக இருந்தது.

மாற்றுப் பாதை ஒன்றின் ஊடாக செல்வதென்றால் காட்டுப்பாதை ஒன்றின் ஊடாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, உரிய அதிகாரிகள் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக மாற்று வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்