
தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்களை இல்லாமல் செய்த ஆண்டு 2022 என காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்
பிரகீத் எக்னலி கொடவின் மனைவி சந்தியா தனது முகநூல் பதிவொன்றில்
குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி – எங்கள் வீட்டில் பாற்சோறு இல்லாத
13 வருடங்கள். இந்த 13 வருடங்களில் 2022ஆம் ஆண்டே மிகச் சிறந்த வருடம்
என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்தவர்களை – தங்களை
மன்னர் என நினைத்துக் கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம் இது. இதன்
காரணமாகவே நான் 2023ஆம் ஆண்டு 2022 போன்று காணப்படவேண்டும் என
பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.