பாறை மேல் ஏறி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா!

தமிழ் திரையுலகில் நகுல் நடிப்பில் வெளியான ´தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்´ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி அனைவரையும் கவர்ந்தார். இதன் மூலம் அவருடைய ரசிகர்கள் பட்டாளம் பெறுகியது.

இவர் பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன் ´கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா´ , ´கன்னித்தீவு´, ´பொல்லாத உலகில் பயங்கர கேம்´ , மில்லர், காபி வித் காதல் என பல படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாறை மேல் ஏறி கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்