பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொலை சதி விவகாரம் : 4 பேர் பிணையில் விடுவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி
 எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, தமிழீழ
விடுதலை புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்க முயற்சித்தமை தொடர்பில் குற்றம்
சுமத்தப்பட்டுள்ள ஐவரில் நால்வரை  பிணையளித்து  கொழும்பு மேல் நீதிமன்றம்
விடுவித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை
புதன்கிழமை (12) பிறப்பித்தார்.

 சோலை குமரன் அல்லது மாஸ்டர் எனப்படும்  காராலசிங்கம் குலேந்ரன்,  கடலன்
அல்லது ஜனா எனப்படும்  லுவிஸ் மரியநாயகம் அஜந்தன், சேந்தன் எனப்படும்
முருகையா தவசேந்திரன்,  வரதன் அல்லது மதன் எனப்படும்  ஞானசேகரலிங்கம்
ராஸ்மதன் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்