பாராளுமன்றப் பகுதியில் மோதலில் 42 பேர் காயம்

பாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்று புதன்கிழமை இரவு பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இதன்போதான மோதலில் 42 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு – தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் கொழும்பு பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும் பாராளுமன்ற பொல்துவ சந்திக்கு முன்னாலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 84 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்