பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக ஜகத் புஷ்பகுமார தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்  ஜகத் புஷ்பகுமார மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 

 ஜகத் புஷ்பகுமாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷ் வழிமொழிந்தார். 

அண்மையில்  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜகத் புஷ்பகுமார ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரிலும் பொது மனுக்கள் பற்றிய குழுவின் தலைவராக செயற்பட்டார்.

பாராளுமன்றத்தின் 120(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பொது மனுக்கள் பற்றிய குழுவுக்கு அண்மையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 

அதற்கமைய,  இம்தியாஸ் பாகிர் மாகார்,  பியங்கர ஜயரத்ன, திலிப் வெதஆரச்சி, வடிவேல் சுரேஷ், ச. வியாழேந்திரன்,  அசோக்க பிரியந்த, அ. அரவிந்த் குமார்,  கீதா சமன்மலீ குமாரசிங்ஹ,  பீ.வை.ஜீ. ரத்னசேக்கர,  சாரதீ துஷ்மந்த,  கோவிந்தன் கருணாகரம்,  ஜயந்த கெட்டகொட,  மொஹமட் முஸம்மில்,  துஷார இந்துனில் அமரசேன,  வேலு குமார்,  வருண லியனகே,  யூ.கே. சுமித் உடுகும்புர,  மாயாதுன்ன சிந்தக அமல்,  நிபுண ரணவக,  காமினி வலேபொட, ராஜிகா விக்கிரமசிங்ஹ, எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் பொது மனுக்கள் பற்றிய குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்