பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்!

வவுனியா – தாண்டிக்குளத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் பொருத்தப்பட்டுள்ள ஒளி சமிக்ஞை சில சமயங்களில் புகையிரதம் அருகில் வரும் போதே ஒளிர்வதுடன், சில நேரங்களில் இயங்காமல் விடுவதினாலும் அவ்வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் அச்சத்துடனேயே அப்பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தமையுடன், பல விபத்துக்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்