பாட்­டி வீட்­டி­லி­ருந்து பெரும் தொகையை திருடிய யுவதி…!

உற­வினரான தனது பாட்டியின் வீட்­டி­லி­ருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகைகள் உள்­ளிட்ட பொருட்­களைத் திரு­டி­ய­தாகக் கூறப்­படும் யுவ­தி ஒருவரை கைது செய்­துள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

லுணு­வில, சிறி­கம்­பள பிர­தே­சத்தைச் சேர்ந்த 24 வய­து­டைய யுவ­தியே இவ்வாறு நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கைதான யுவதி தனது பாட்­டியின் வீட்­டி­லி­ருந்து இரண்டு பவுண் எடை­யு­டைய தங்கச் சங்­கிலி, பென்டன், கைப்­பேசி, கைக்­க­டி­காரம் போன்­ற­வற்றைத் திருடிச் சென்­றுள்­ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணை­­களை மேற்­கொண்ட பொலிஸார் யுவ­தியைக் கைது செய்­துள்­ளனர். இந்நிலையில் தனக்கும், தனது கண­வ­ருக்கும் ஹெரோயின் வாங்­கு­வ­தற்­காக பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்­கி­லேயே இவ்­வாறு திருட்டில் ஈடு­பட்­டுள்­ள­தாக அப்பெண் பொலி­ஸா­ரிடம் அவர் தெரி­வித்­துள்ளார்.

முகநூலில் நாம்