பாடசாலை வேன் கட்டணங்களில் உயர்வு ; “சிசு செரிய” பஸ் சேவைகளை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை வேன் கட்டணங்களை அதிகரிக்கப்பட்டுள்ளமயை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் ‘சிசு செரிய’ பஸ் சேவை பஸ்களை அதிக அளவில் சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தற்போது பாடசாலை வேன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன . 5000 ரூபாவாக காணப்பட்ட கட்டணங்கள் தற்போது 10000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவை பெற்றோருக்கு மேலதிக பொருளாதார நெருக்கடியை உண்டு பண்ணுகின்றன. அத்துடன், சிசு செரிய பஸ்களுக்கு செலவிடும் கட்டணம் மிகக் குறைவானதாக அமையும். இவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம். மாணவர்களின் வசதியை கருதி அந்தந்த பாடசாலைகளின் தேவைக்கேற்ப அதிகளவான ‘சிசு செரிய’ பஸ்களைஈடுபடுத்தவுள்ளோம் என்றார்.

மேலும், நாட்டின் பிரதான அலுவலகங்களின் பயணிகளை குறிவைத்து புதிய ரயில் சேவைகளை ஆரம்பிக்கவும், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு  எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்