பாடசாலை மாணவியை தாக்கிய கிராம சேவகர் உள்ளிட்ட 3 வர் விளக்கமறியல் 

குருணாகல் – நிக்கவெரட்டி பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் உள்ளிட்ட மூவரையும்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் நிக்கவரெட்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொட்டவெஹர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய காணொளியை அயலவர் ஒருவர் தனது கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறித்த ஒளிப்பதிவு ஊடகங்களின் ஊடாக ஒளிபரப்பானது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார், சிறுமியின் தந்தை உள்ளிட்ட மேலும் இரு பெண்களையும் கைது செய்தனர்.

பின்னர் காயமடைந்த சிறுமி நிக்கவரெட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் தற்போது குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.

இச்சம்பவம் தொடர்பாக கொட்டவெஹர பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்