பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி!

பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், கல்விச் செயல்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்தநிலையில், உயர்தர பரீட்சைகள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்க எதிர்வரும் புதன் கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலைகளை மீள திறப்பது குறித்தும் பரீட்சைகளை நடத்துவது தொடர்பிலும் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித ஆலோசனைகளையும் வழங்கவில்லை எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகள் திறக்கப்பட்டதும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான தவறவிடப்பட்ட அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதன் பின்னரே உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் என்றார்.

எவ்வாறாயினும், மாணவர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படும் விதத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

முகநூலில் நாம்