பாடசாலை மாணவர்களுக்கான துவிச்க்கரவண்டிக்கு மின்னொளி ஊட்டும் ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (09.09.2020) கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சந்திரசேகர் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின்னொளி ஊட்டும் ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது தற்போது எமது நாடு மட்டுமில்லாமல் உலக நாட்டிலும் அச்சுறுத்தும் வகையில் கொரானா என்னும் வைரஸினால் பலர் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளார்கள் இதை கருத்தில் கொண்டு எமது மாவட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லாவிடிலும்  அது தொடர்பான விழிப்புணர்வுகள்  இருக்க வேண்டும்.


அத்தோடு என்றுமில்லாதவாறு கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர் மீது போதைப்பொருள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது இடை நிறுத்த வேண்டுமென்றால் உங்களைப் போன்றவர்களா மட்டும் தான் இதை நிறுத்த முடியும் எனவே இந்த போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருக்கும்படி மிகவும் பணிவன்புடன் கற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.


இதன்போது கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சந்திரசேகர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுக்குள் 650 விபத்துக்களில் சுமார் 137 பேர் பலியாகி உள்ளார்கள் அதிலும் அதிக கூடியவர்கள் இளைஞர்களே ஆவார் எனவே வீதி விபத்துக்களை தடுப்பது வீதிப் போக்குவரத்து பொலிஸாரால் மட்டும் முடியாது  உங்களைப் போன்றவர்கள் ஏனையவர்களுக்கும் தெரிவிக்கும்போது ஓரளவேனும் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்வில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் கமலராஜ், அறிவியல் நகர் ஆடைத் தொழிற்சாலையில் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டார்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்