
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, ஆறுமுகத்தான்குளம் அ.த.க.பாடசாலைக்கு ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் இ.கவர்கரினால் கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணறு மாணவர்களின் ஆசிரியர்களின் பாவனைக்கு நேற்று காலை 10.00 மணியளவில் பாடசாலையின் முதல்வர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.