பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்திலும் மாற்றம்

பாடசாலைகள் திறந்த பின்னர் அதனை நடத்தி செல்லும் காலம் மற்றும் நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 3ஆம் மற்றும் 4ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.30 வரை பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.

5ஆம் வருப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையான பாடசாலை மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்