பாகுபலி 3 ராஜமௌலியின் புதுத் திட்டம்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி-2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவில் பெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தை இயக்கிவரும் ராஜமெளலி, அடுத்ததாக ‘பாகுபலி-3’ குறித்த ஒரு பெரும் திட்டத்தை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியிடுவதற்காக இல்லை என்பதுடன் ஓ.ரி.ரி. தளத்தில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெற்பிளிக்ஸ் ஓ.ரி.ரி. தளத்திற்காக ‘பாகுபலி-3’ இணையத் தொடரை இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்பது பகுதிகள் கொண்ட இந்தத் தொடரை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தயாரித்து இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி-2’ ஆகிய இரு திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் பெரும் வெற்றி பெற்றதால் ‘பாகுபலி-3’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது ஓ.ரி.ரி.யில் பெரும்பாலான இரசிகர்கள் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டதால், இந்தப்படம் ஓ.ரி.ரி.யில் வெளிவந்தாலும் முதல் இரண்டு பாகங்களைப் போல் பெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்