
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் விளையாடிவரும் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பாட்டுக் குழு, அணி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்மான இத்தொடரில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பை அறிவிக்கும் இந்த நேரத்தில் திட்டமிடப்பட்ட 34 போட்டிகளில் 14 போட்டிகள் மட்டுமே முடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடனடி நடவடிக்கையாக, பங்கேற்பாளர்கள் அனைவரின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. பங்கேற்ற ஆறு அணிகளுக்கும் மீண்டும் பிசிஆர் சோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.