பாகிஸ்தானிடம் வீழ்ந்தது சிம்பாப்வே அணி

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹரிஸ் சோயில் 71 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், டென்டாய் சீசோரோ மற்றும் முஸ்ராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மும்பா மற்றும் ரஸா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிம்பாப்வே அணி, 49.4 ஓவர்களுக்கு சுருண்டது. இதனால் பாகிஸ்தான் அணி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் டெய்லர் 112 ஓட்டங்களையும், வெஸ்லி மாதேவர் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளையும் இமாட் வசிம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 117 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிரெண்டன் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்