பஸ் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை அவதானம் செலுத்தியுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, பஸ்களில் காணப்படும் ஆசனங்களுக்கு மேலதிகமாக குறைந்த அளவிலான பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும் என்பதனால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் A.H.பண்டுக குறிப்பிட்டார்.

இதேவேளை, அனைத்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்