பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றும் நடைமுறையை சட்டமாக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ள விடயம் குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பு பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறது.

இந்த நடைமுறை சட்டமாக அமுலாகும் பட்சத்தில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் இந்த யோசனையை தான் ஏற்பதாக தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மாறாக கட்டண அதிகரிப்பு குறித்து அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்