’பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடியாது’

கொவிட் – 19 பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரையில் மக்கள் பொதுப்போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்துவது குறைவடைந்துள்ளதால் தங்களுக்கு போதியளவு வருமானம் கிடைப்பதில்லை என பொதுப்​ போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சில் நேற்று (23) நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது, கடந்த இரு வருடங்களாக போக்குவரத்து கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை எனவும், போக்குவரத்துச் சேவை ஊழியர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக நாட்டின் சகல துறைகளும் முடங்கி கிடக்கும் நேரத்தில் போக்குவரத்து கட்டண்ஙகளை அதிகரிப்பது பொறுத்தமற்றதெனவும், அதனைச் செய்ய அரசாங்கம் தயாரில்லை என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

முகநூலில் நாம்