
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ எனும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளையொட்டி படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ உஸ்தாத் பகத்சிங்’. இதில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கேஜிஎஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்துக்கு ‘ரொக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
எக்ஷன் என்டர்டெய்னராக தயாராகிவரும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் வை. ரவி சங்கர் ஆகியோர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.
போஸ்டரில் வித்தியாசமான உடையுடன், கையில் குருதி தோய்ந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு மாஸான லுக்கில் பவன் கல்யாண் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 5ஆம் திகதி முதல் தொடங்குகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.