பழைய கடன்கள் காரணமாக இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு உலக நாடுகளும் சர்வதேச நிதியமைப்புகளும் தயக்கம்- அர்ஜூன மகேந்திரன் தெரிவிப்பு

முன்னைய கடன்கள் பெருமளவிற்கு குவிந்துள்ளதால் உலகநாடுகளும் சர்வதேச நிதியமைப்புகளும் இலங்கைக்கு நிதிவழங்குவதற்கு தயங்குகின்றன இந்தியா கூட தயங்குகின்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் பிலிப்பைன்சிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் குறித்த கேள்விக்கு தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரிச்சலுகைகள் பணவீக்க அழுத்தத்தை உருவாக்கின அரசாங்கத்தின் செலவீனங்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்ட பணத்தை அடிப்படையாக கொண்டிருந்ததே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரங்கள் இறக்குமதி தொடர்பில்  விவசாய கொள்கைகளில் மாற்றம் இடம்பெற்றது இரசாயன உரங்களில் இருந்து மாறியது தேயிலை மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றுமதி செய்யும் தோட்டத்தொழில்துறையை பாதித்தது, என தெரிவித்துள்ள அர்ஜூன மகேந்திரன் கொவிட் தாக்கத்தொடங்கியவேளை  இலங்கையின் பொருளாதாரதம் ஏற்கனவே வீழ்ச்சி நிலைiயில் காணப்பட்டது .இதன் காரணமாகவே இலங்கை ஏனைய நாடுகளை விட அதிகமாக பாதிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வரவுசெலவுதிட்டம் மற்றும் பணம் அச்சிடுதல் ஆகியன முழுமையாக கட்டுப்பாட்டை மீறுவதை தவிர்ப்பதற்காக வரிவிதிப்பு விகிதங்கள் முன்னர் காணப்பட்ட அளவிற்கு அதிகரிக்கப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாய நடைமுறைகளை முன்னைய நிலைக்கு மாற்றவேண்டும் பாரிய மாற்றங்களை மேற்கொள்வது என்றால் விவசாயிகளிற்கு அதிகளவு கால அவகாசத்தை வழங்கவேண்டும் எனவும் அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய நிதிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் அந்நியசெலாவணி இல்லாத பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் கடந்தகாலத்தில் பெருமளவு கடன்களை பெற்றுள்ளதால் கடன்கள் குவிந்துள்ளதால் இலங்கைஅரசாங்கம் நிதிவழங்குநர்கள் தனக்கு நிதி வழங்கச்செய்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது இந்தியா கூட புதிய நிதியை வழங்க தயங்குகின்றது என மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மீண்டும் வந்துவிட்டார் என தகவல் கிடைத்தது, அவர் அலுவலகத்தில் இருக்கின்றார் ஆகவே அரசாங்கம் இயங்குகின்றது பொருளாதாரம் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன, என தெரிவித்துள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்த பொருளாதார நெருக்கடி பட்டினியையும் இலங்கை மக்களிற்கு தேவையற்ற துயரத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்னர் சரியான பொருளாதார கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்