பழைய இரும்புக்காக விற்பனைசொய்யப்பட்ட துவிச்சக்கர வண்டிகள் மீண்டும் பாவனைக்கு

இலங்கையில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியினால் தற்போது துவிச்சக்கர வண்டியின் விலை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரும்புக் கடைகளில் இருந்து மக்கள் கழிவாக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை புதுப்பித்து பாவனைக்கு பயன்படுத்துகின்றார்கள்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஏரிபொருள் பற்றாக்குறை விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகம் பாதித்துள்ளனர். இவர்கள் இதனை தொடர்ந்து மக்கள் துவிச்சக்கர வண்டி பயன்பாடு தொடர்பில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள்.
நாட்டில் புதிய துவிச்சக்கர வண்டிகள் இல்லாத நிலையிலும் இறக்குமதியின்மையாலும் கழிவாக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளுக்கு கடும் கிராக்கி நிலவுகின்றது. ஜப்பான் துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை 60.000-100.000 வரை அதிகரித்து செல்கின்றது.
கிளிநொச்சியில் வசிக்கும் க.சங்கர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
இலங்கையில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அதிகளவில் பாதித்துள்ளனர். மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது போக்கு வரத்துக்களுக்காக மோட்டார் சைக்கிள்கள் வாகனங்கள் சொகுசு கார்களையும் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து மக்கள் மீளவும் துடிச்சக்கர வண்டிகளை அதிக மானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளதை காணமுடிகின்றது..
கடந்த இரண்டு மூன்று வாரங்களில் புதிய துவிச்சக்கர வண்டிகளினுடைய விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியின் பாவனையும் அதிகரித்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் 18000 தொடக்கம் 19000 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை தற்போது 60ஆயிரம் ரூபாவை கடந்து சென்றுள்ளது.
அத்துடன் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலே வீடுகளில் காணப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை முன்பு பழைய இரும்புகளுக்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது பழைய இரும்பு களுக்காக விற்பனை செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டி உதிரி பாகங்களை இப்போது பழைய இரும்பு வியாபாரிகளிடமிருந்து கொள்ளளவு செய்து அவற்றை மீளவும் புதிய உதிரி பாகங்களை பொருத்தி துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதனால் துவிச்சக்கர வண்டிகள் திருத்தும் நிலையங்களில் அதிகளமான துவிச்சக்கர வண்டிகள் திருத்துவதை அவதானிக்க முடிவதுடன் துவசக்கர வண்டி உதிரி பாகங்களினுடைய விலையும் மிக சடுதியாக அதிகரித்து வருவதை காணமுடிகின்றது. இதனாலும் மக்கள் துவிச்சக்கர வண்டிகளின் பாகங்களை வாங்க சில மக்களுக்கு சிறமமாக இருப்பதை காணமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்