
இலங்கை தொடர்பான பயண ஆலோசனைகளை இலகுபடுத்தும் பல நாடுகளின் நடவடிக்கையை
வெளிவிவகார அமைச்சு வரவேற்றுள்ளது.
குளிர்கால மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கும்
இலங்கைக்கு ஜேர்மனியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை வரவேற்கத்தக்கது
என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான சுற்றுலாத்
துறையை எதிர்வரும் விடுமுறைக் காலம் மேம்படுத்தும் என நம்புவதாக
வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.