பல தோற்றங்களில் அசத்தும் விக்ரம்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படதை இயக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. கணித மேதையான விக்ரம் தன் பிரச்னைகளுக்கு கணிதம் மூலம் தீர்வு காணும் வகையில் படத்தின் கதை உருவாகியுள்ளது. மேலும், பல தோற்றங்களிலும் விக்ரம் நடித்துள்ளார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஆதீரா ஆதீரா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ். ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி போன்றோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்