
பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே
விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் வியாழக்கிழமை
அறிவித்துள்ளது.
இதற்கமைய இதன் பின்னர் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் பதிவாகும் பகிடிவதை
தொடர்பிலும் சி.ஐ.டி.யினரேயே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ்
பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவைக்கு அமைய இவ்வாறு அவை பொலிஸ் மா
அதிபரால் சி.ஐ.டி.யினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடதக்கது.