பல்கலைகழகத்திற்குள் காடையர் கும்பல் பல மாணவர்கள் காயம்

புதுடில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்திற்குள் இன்று மாலை புகுந்த காடையர் கும்பலொன்று மாணவர்கள் பல்கலைகழக ஆசிரியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

முகத்தை மறைத்தபடி பல்கலைகழகத்திற்குள் நுழைந்த காடையர் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் பல்கலைகழக மாணவர் தலைவர் உட்பட பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காடையர் கும்பல் இன்னமும் பல்கலைகழகத்திற்குள்ளேயே உள்ளனர் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 50ற்கும் மேற்பட்ட காடையர்கள் இன்று மாலை பல்கலைகழகத்திற்குள் நுழைந்தனர் அவர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக பலர் காயமடைந்துள்ளனர் வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் மோசமாக தாக்கப்பட்டேன் என இரத்தக்காயங்களுடன் காணப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

25 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் நாம்