ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
கொரோனா வைரஸ் பரவியதால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடகடிக்கைகள் தொடர்பில் இதன்போது அவர் தௌிவுபடுத்தினார்.
Covid-19 வைரஸ் தொற்று காரணமாக ஜனாதிபதி இதன்போது சில நிவாரணங்களையும் அறிவித்திருந்தார்
அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் அதிகபட்ச விலை 65 ரூபாவாகவும் டின் மீனின் அதிகபட்ச விலை 100 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.


மேலும், வங்கிக் கடன் அறவிடும் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.