
சீனாவானது தனது நாட்டின் வடமேற்கு மகாணமான சிசுவானிலுள்ள ஸிசாங் செய்மதி ஏவும் நிலையத்திலிருந்து இரு புதிய செய்மதிகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் (06.09.2022) வெற்றிகரமாக ஏவியுள்ளது.
மேற்படி சென்ரிஸ்பேஸ் 1-எஸ்3/எஸ்4 செய்மதிகள் லோங் மார்ச்-2டி ஏவுகணை மூலம் ஏவப்பட்டுள்ளன.
மேற்படி செய்மதிகள் விஞ்ஞான பரிசோதனைகள், நில வள ஆய்வுகள், விவசாய உற்பத்தி மதிப்பீடுகள், அனர்த்த தடுப்பு மற்றும் தணிவிப்பு நடவடிக்கை என்பன குறித்து தகவல்களைச் சேகரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செய்மதிகள் சகிதம் லோங் மார்ச் ஏவுகணையொன்றால் மேற்கொள்ளப்படும் 436 ஆவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.