பரபரப்பான வேளையில் ரஜினியின் அடுத்த அதிரடி! முக்கிய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று சென்னை லீலா பேலஸில் ரஜினி மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறார்.

2021 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வேளையில் ரஜினியின் இந்த செயல் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. காலையில் அவரின் வீட்டின் முன் கூடிய ரசிகர்கள் அவரின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதற்கிடையில் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் வீட்டில் இருந்த படியே அவர் அவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசினாராம்.

பின் வீட்டிலிருந்து கிளம்பி காரில் சென்ற அவருக்கு பூ தூவி, வாழ்த்து கோஷமிட்டு மரியாதை செய்தனர்.

கட்சி குறித்து முக்கிய அறிவிப்பை கூறும் நிலையில் வரும் ஏப்ரல் 14 ல் கட்சி தொடங்கப்படும் என்றும், திருச்சியில் முதல் மாநாடு நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் நாம்