பயங்கரவாத தடைச்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளனர்- அம்பிகா சற்குணநாதன்

யங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனேகமானவர்கள் பொருளாதார
ரீதியாக அனைத்தையும் பறிகொடுத்தவர்களாக  புறக்கணிக்கப்பட்டவர்களாக
உள்ளனர், அதற்கு அப்பால் மனஉளைச்சல் வேறு  அவர்கள்
தடுத்துவைக்கப்பட்டுள்ளமை அவர்களது குடும்பத்தினரை மேலும் வறுமைக்குள்
தள்ளுகின்றது.

அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் சமூகத்தில்
களங்கப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களால் தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிக்க
முடியாதநிலை காணப்படுகின்றது.

நீடித்த விசாரணைகள் மற்றும் நீதித்துறை செயற்பாடுகள் ,குறிப்பிட்ட நபர்
மற்றும் அவர்களது குடும்பத்தினர்களிற்கு ஒரு கூட்டுத்தண்டனையாக
மாறுகின்றன.

இந்த செயல்முறையே ஒரு தண்டனை.இந்த செயல்முறை வேண்டுமென்றே
தண்டனையாக்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தால் அழிக்கப்பட்ட
குடும்பங்களிற்கு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதரவு
தேவைப்படுகின்றது.

ஆனால் அத்தகைய  ஆதரவு மிகவும் குறைவு.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து
செய்து அதனை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடைவிதிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்