பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் – ஜனாதிபதி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள்மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர்,இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பனதொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில்விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த வாரத்தில் தாம் அங்குள்ளபாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போதுதெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்