
பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்இன்னும் இரு மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சிகளின்பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு பதிலளித்தார்சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (03) பாராளுமன்ற அமர்வு கூடிய போதுநாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில்எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாககுறிப்பிடுவதை ஏற்க முடியாது.போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்தகோரிக்கைகள் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன.நாட்டின்அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக பாராளுமன்ற மட்டத்தில்அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார்மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,புதிதாக மூன்று விசேட தெரிவுக்குழுக்களை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.பொருளாதார மறுசீரமைப்புக்காக நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம்செய்யப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் விசேடதேவையுடையவர்களுக்கான சட்டம்,ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள்காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன.பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்இயற்றுவதற்கான சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள்பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.