பப்புவாநியுகினியில் சீனாவின் முதலீடு அவுஸ்திரேலியாவில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது

பப்புவாநியுகினியில் சீனா தனது முதலீட்டை அதிகரிப்பது அவுஸ்திரேலியாவிற்கு கரிசனையளித்துள்ளது. சீனா தனது நாட்டில்  முதலீடுகளை அதிகரிப்பதற்கு பப்புவாநியுகினி அனுமதிப்பது,  அவுஸ்திரேலியாவின் வாயில் சீனா இராணுவ ரீதியில் காலடிவைப்பதற்கு அனுமதிப்பதாகும் என்ற கரிசனைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரித்துள்ளன.

பப்புவாநியுகினியில் பாரிய முதலீடுகளை சீனா ஏற்கனவே மேற்கொண்டுள்ளது, அந்த நாட்டின் எரிவாயு,கனிமங்கள் மரங்கள் பிறவளங்களில் அதிகளவானவற்றை சீனா கொள்வனவு செய்து வருகின்றது,ஜூன் மாதம் இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன.

இந்த வருடத்தி;ல் சீனா சொலமன் தீவுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்து கரிசனைகள் வெனியாகியுள்ள போதிலும், சீனாவின் அதிக முதலீட்டை அனுமதிப்பது அந்த நாடு அவுஸ்திரேலியாவின் வாயிலில் இராணுவரீதியில் காலடிஎடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்பது குறித்து கவலையற்றவராக பப்புவா நியுகினியின் பிரதமர் ஜேம்ஸ் மாரப்பே  காணப்பட்டார்

உண்மையை சொல்லவேண்டும் என்றால் இது குறித்த தகவல் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை,என அவர் சொலமன் உடன்படிக்கைகுறித்து தெரிவித்தார்.இது குறித்து அறிந்திருக்காமலிருக்க முடியாது என செய்தியாளர்  தெரிவி;த்த போதிலும் பப்புவா நியுகினியின் பிரதமர் அவ்வாறு  தெரிவித்தார்.

இது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்;பப்பட்டவேளை தனது நாட்டில் சீனாவின் முதலீடுகள் சீனாவிற்கு எந்த சாதகமான தன்மையையும் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டார். ஏனைய நாடுகளின் இறைமை விடயத்தில் தலையிடநான் விரும்பவில்லை,எந்த எல்லைகளை பாதுகாக்கவேண்டும் எந்த எல்லைகளை கடக்ககூடாது என்பது எங்களிற்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.

சீனாவிற்கும் சொலமன் தீவுகளிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த  தகவல்கள் வெளியானவேளை  அவுஸ்திரேலியா அதனை கடுமையாக சாடியதுடன் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அந்த உடன்படிக்கை சீனாவிற்கான தளத்தை அமைப்பதற்கு அனுமதிக்ககூடாது எனவும் அது வலியுறுத்தியிருந்தது.

சீனா அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவித்த பின்னர் அப்போதைய அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெயன் கடும் கவலை வெளியிட்டிருந்தார். சீனாவிற்கும் சொலமன் தீவுகளிற்கும் இடையில்  பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளமை குறித்து நாங்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளோம் தங்கள் பாதுகாப்புதொடர்பான இறைமையான முடிவுகளை எடுப்பதில் அந்த நாட்டிற்குள்ள உரிமையை நாங்கள் மதிக்கின்றோம் என மரைஸ் பெய்ன் தெரிவித்திருந்தார்.

இந்த உடன்படிக்கை எவ்வளவு வெளிப்படைதன்மையற்றது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம் இது எங்கள் பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திறன்வாய்ந்தது,எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வருட ஆரம்பத்தில் தென்பசுபிக்கிற்கு ஒருவார கால  சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிராந்தியத்தின் பாதுகாப்பில் சீனாவிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் பத்துநாட்கள் விஜயம் மேற்கொண்ட போதிலும் கொள்கை பாதுகாப்பு கடல்சார் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உணர்வுபூர்வமான விவகாரங்களில் சீனாவிற்கு மேலும் முக்கியத்துவத்தை அளிக்கும் பிராந்திய உடன்படிக்கையை பசுபிக்தீவுகள் நிராகரித்தன.

சீனா வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயம் அவுஸ்திரேலியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கை மூன்று பசுபிக் தீவுகளிற்கு சூறாவளி பயணமொன்றை மேற்கொள்ள தூண்டியது,அவர் தசாப்தகால கூட்டணியை பலப்படுத்த முயற்சித்தார்.

பிராந்தியத்திற்குள் நுழைந்தமை சீனாவின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதி என முன்னாள் அமெரிக்க தளபதி பிலிப் டேவிட்சன் தெரிவித்தார். பப்புவாநியுகினியும் வெளிப்படையாக சொல்வதென்றால் அனைத்து பசுபிக் நாடுகளும் ஆபத்தான நிலையில் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.

சீனா விதிமுறைகளின்படி விளையாடுவதில்லை இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலக ஓழுங்கை மாற்றிய தங்களின் உலகை ஒழுங்கை நிலைநிறுத்தும் பெரிய அபிலாசைகள் அவர்களிற்கு உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்