பனை அபிவிருத்தி சபையில் மோசடி : இரு சிரேஷ்ட அதிகாரிகள் பணி நீக்கம்

அரச சொத்துக்கள் மற்றும் பணத்தை துஷ்பிரயோகம் செய்த பனை அபிவிருத்தி
சபையின் பிரதி பொது முகாமையாளர் உட்பட இரண்டு சிரேஷ்ட அதிகாரிகள் பணி
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பங்கட்டி தயாரிக்கும் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் 2கோடி ரூபாயிற்கு
மேல் மோசடி செய்த கணக்காய்வாளர் மற்றும் உற்பத்தி முகாமையாளர் ஆகியோர்
இடைநிறுத்தப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பனை அபிவிருத்திச் சபையில் சம்பளம்
பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இரு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தும்
சம்பளம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு இடம்பெற்ற ஊழல் மோசடிகளை மூடி மறைத்த கணக்காய்வாளர்கள்
இருவர் இடமாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு புதிய அதிகாரிகள்
நியமிக்கப்பட்டவுள்ளனர்.

கணக்காய்வு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட 70 வீதமான ஊழல், மோசடி
மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஏற்கனவே முறையான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்