பத்தரமுல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணி நேர நீர்வெட்டு!

பத்தரமுல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மறுதினம் (23) 8 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் மறுதினம் காலை 6 வரையான காலப்பகுதியில் பத்தரமுல்லை, கொஸ்வத்த, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

படபொத நீர்த்தாங்கிக்கு நீரை விநியோகிக்கும் குழாய் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்